ஆத்ம விசாரம்…… (என் முகநூல் பகிர்வு)

படம்

எனக்கான சாத்தியங்களின் எல்லைகளை உணரமுடியாத தருணங்களில் தவித்துதான் போகிறேன். எந்த ஒரு சம்பாஷனைகளையும் அறிவுரைகளாக முடிக்கும் ஆர்வக்கோளாரை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆழப் படிப்பதை தர்க்கங்களுக்குள் எடுத்துச் செல்லாமல் சிரித்து மழுப்ப பெரும் ப்ரயத்தனம் செய்தே ஆகவேண்டும். நல்லவனாக காட்ட முயற்சிக்காதது ஒன்றுதான் அன்றிலிருந்து இன்றுவரையான ஒரே ஆறுதல். 

பதில்களும் கேள்விகளுமில்லாமல் வாழ்க்கையை ஸ்வீகரிக்கும் ஆத்மாக்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. வெள்ளந்தித்தனமான ஞானம் கிடைக்கப்பெறுவது ஒரு வரம். கிடைப்பதே தெரியாமல் அது கிடைத்தால் பெரும் பேறு. 

“பேசாமல் முட்டாளாகவே இருந்திருக்கலாம்” என்று நினைத்துவிட்டு, “இப்போ என்ன அறிவாளியாகவா இருக்கிறேன்” என்று கேட்டுக்கோள்ளும் அளவே என் அறிவு வளர்ந்திருப்பதை நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள முடியவில்லை. 

மனமுதிர்ச்சியும் மடத்தனமும் ஒருசேரத் தெரிவதால், நான் யாரென்பதன் குழப்ப வினா துரத்தி வந்துகொண்டே இருக்கிறது. எந்தக் கத்திரியும் இல்லாமல் இதுவரை எழுதியதை வாசிக்கும்போது , நன்றாகப் புலம்ப வருகிறது என்பதுமட்டும் தெரிகிறது. 

வரைமுறையையும், கொள்கைக் கோட்பாட்டையும் எப்படிவேண்டுமென்றாலும் என் சௌகர்யத்துக்கு மாற்றி அதற்கொரு ஞாயம் கற்பிக்கத்தெரிந்திருப்பதால், அமைச்சராகும் அபாயமும் இருக்கிறது.

ஆகக்கூடி அத்தனை பிம்பங்களும் ஒன்றுமாற்றி ஒன்றாக, இதோ எனக்கு மேல் சுற்றும் மின்விசிறியின் வெட்டுக்கோடுகளாய்த் தெரியும் இறக்கைகள் போல் தடதடத்து , கட்டுப்பாடில்லாமல் வந்துபோகிறது……….. இருக்கட்டும். 

எது எப்படி இருப்பினும், 

பிஸ்மில்லாகான் இறந்த அன்று, உண்ணப்பிடிக்காமல் காரணமின்றி தொடர்ந்து நாள் முழுக்கக் கண்ணீர் விட்ட அந்த சிறுவன் எனக்குள்ளே இருக்கும் வரை, இந்த வாழ்க்கையின் மீதான என் காதல் பெருகிக்கொண்டேதான் இருக்கும் …. !

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ஆத்ம விசாரம்…… (என் முகநூல் பகிர்வு)

 1. நமக்குள் நம்மை நல்லவனாக வாழ்ந்தாலே போதும்… மற்றவர்களுக்கு காட்ட முயன்றால் புலம்பல் தான்… ஆனால் புலம்பல்களை பகிரலாம்… தொடர வாழ்த்துக்கள்…

 2. Kamali சொல்கிறார்:

  இந்த அலசலில் உள்ள உண்மையும் நேர்மையும் எனக்குள் மிக பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது…

 3. sheela சொல்கிறார்:

  ingei thangalin adayalam osm 🙂

 4. ramdaus சொல்கிறார்:

  Wonderful. I think that innocent boy in us keeps us going and in letting us do however small good we can to others. This is a very nice write up Sam. Keep it up :).

  PS: I somehow prefer reading it in blogs than in Facebook, and I don’t like to call it as ‘Muga Nool’ in Tamil. It is a very lame translation and Thamizh is not such a weak language. In my humble opinion, if there is any language that can be compared with Tamil, it is only Sanskrit.

 5. prathiba prathi சொல்கிறார்:

  நன்றி சார் நல்ல கருத்துக்கள் மற்றும் அவருடைய உண்மைகள் அடங்கிய பதிவு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s