இந்த வருடம் தொடங்கியது முதல் என் ஆத்மப் ப்ரியங்கள் ஒவ்வொருவராக விடைபெறுவது இடி மேல் இடி …
நீ யாராக இருக்க விரும்புகிறாய் என்று யார் கேட்டாலும் சிறு வயதிலிருந்து ஒவ்வொருவரை சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் சமீப வருடங்களாக “வாலி ஐயா போல் வாழவேண்டும்” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இது சத்தியமான சத்தியம்.
சொல்லும் வார்த்தைகளும் எழுதும் எழுத்துக்களும் எப்போதும் பதின் பருவத்திலேயே நிற்பது இவர் ஒருவருக்குத்தான். எப்போதும் தமிழும் ஆங்கிலமும் சரளமாக ஹாஸ்யம் கலந்தே வெளிப்படும் கொடுப்பினை பெற்ற அபூர்வம் இவர்.
இந்த இளைஞனைப் பற்றி நினைக்கும்போது நம்மையும் அறியாமல் எதுகையும் மோனையும் துள்ளிவருகிறது …
என்னிலும் துளிர்த்தன சில வரிகளை….. இதோ
“அழகர்மலைக் கள்ளனில்” தொடங்கிய
ஆராவமுதன்
“காவியத்தலைவனில்” அடங்கிய
கவித் தலைவன்
ஓவியனாகவேண்டி
தூரிகை பிடித்த கைகள் – ராம
காவியம் படைத்துவிட்டு
ஓய்வெடுக்கப் புறப்பட்டது
காற்று வாங்கப்போய்
கவிதை வாங்கிவந்தவன் – தன்னிடம்
கேட்டு வந்தோருக்கெல்லாம் – ஊற்றுபோல்
பாட்டு வழங்கினான்
நித்திய பயணம் தொடங்கிய
நித்திலக் கவி மழையே
எத்தலைமுறையும் போற்றும்
முத்தமிழ்க் கவிஞனே
சத்தியம் ஒன்றுரைப்பேன் -இனியொருவன்
சாத்தியமில்லை உன்போல்…..
romba azhagha ezhudhi irukkel..really a great person Vaali Sir was…
மிக்க நன்றி ராதா ஸ்ரீராம் … 🙂
உண்மை… அவரது வரிகள் மனதில் என்றும் ஊற்று தான்…
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் …
போலி இல்லாத அஞ்சலிக்கு அப்பாற்பட்ட வரிகள்….
மிக்க நன்றி ராமஸ்ரீநிவாசன் அவர்களே …