அமேசான் ப்ரைம்ல பாத்து
நானும் என்னோட சாங்கியத்த முடிச்சுட்டேன்.
இதில் அலெக்ஸ பாராட்டியே ஆகவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு .
நல்ல ப்ராக்டிஸ்
ரொம்ப சின்சியரான ஆர்டர்
அவரோட ஸ்டமினா
அபாரம்
இது போக ,
தான் டார்கெட் பண்ற ஆடியன்ஸ் , அவங்களுக்கு எதுவரைக்கும் போதும்னு தெரிஞ்ச அவரோட 15 வருஷ ஐடி அனுபவம்.
இன்னும் குறிப்பா ஏசி ரூமுக்குள்ள என்னென்ன சத்தங்கள் புரியும் புரியாது – பிடிக்கும் பிடிக்காதுன்னு பல்ஸ் பிடிச்ச அவரோட சாதுர்யம்
இதுல இன்னொரு கிளை ஒர்க் அவுட் பண்ணிருக்காப்ல,
அதாவது
என்னென்ன வகையான ஆடியன்ஸ் அவரோட டார்கெட்ங்கறத மனுஷன் கரெக்ட்டா பிரிச்சி ,
அதில் ஒரே ஒரு கேட்டகிரிய மட்டும் ஜலிச்சு எடுத்து அடிச்சிருக்கான் மனுஷன்.
எது அந்த ஒண்ணே ஒண்ணு???
எதையுமே நுனிப்புல் மேஞ்சு ,
டேட்டாஸ் மட்டுமே கலெக்ட் பண்ணிட்டு அதையே அறிவு- ஞானம்ன்னு நம்பிட்டு, தெளிவா அதை டைம்பாஸா மட்டும் வெச்சுகிட்டு,
ஆனா சம்பந்தமே இல்லாத வேற ஒரு துறைல வேலை பாத்து பணம் சம்பாதிக்கும் பெரும்பான்மையான இணைய தலைமுறையினர் ….
( டிஸ்கி :- ஸ்கைப்ல ஈமக்கிரியை செய்துட்டு , “வாட் டு டூ – விதி”ன்னு மறுநாள் ஆபீஸ் போகுற க்ரூப்பும் இதுல சேத்தி)
இவங்க மட்டும் தான் ….
இதுலயும் ஒரு செம சுழி இருக்கு,
இந்த ஒரு க்ரூப்ல தான்
நீங்க நேரடியா 23 ல இருந்து நெருக்கி 50 வரை கவர் பண்ண முடியும் / (மறைமுகமா எலைட் க்ரூப் வயசு வித்தியாசம் இல்லாம உள்ள சேர்ந்திடும்) 😉
அதேபோல உலகம் முழுக்க இருக்கும் தமிழ் ஆடியன்ஸ சேர்த்து தங்லீஷ் கலந்து – ஆனா தமிழ்ல (அப்டித்தான இப்போ வீடுகளில் தமிழ் இருக்கு) இதை க்ளோபலைஸ் பண்ணினது மார்கெட்டிங்கோட தொம்ச மூவ்…
இன்னும் நுட்பமா ஒரு விஷயம்..
என்னன்னா
1990 க்கு பிறகுதான் வெளிநாட்டில் செட்டிலான தமிழ் மக்கள் அதிகம்ங்கறதால , அதுக்கேத்த மாதிரி கான்ஸப்ட்ட டிசைன் பண்ணிருக்காப்ல, (அல்லது அவர் டேஸ்ட் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிதுன்னு வெச்சுக்கலாம்)
இதுக்கு ஒரு சின்ன உதாரணம் –
இளையராஜா பாட்டுல வரும் கோரஸ கிண்டல் பண்ணின அலெக்ஸ்
ரகுமானோட முதல் படம் ரோஜால வரும் “ருக்குமணி ருக்குமணி” ல இருந்து “காதலன்” – என்னவளேன்னு பிக்கப் ஆகி இப்ப வரப்போர பிகிலு வரைக்கும் அவர் பயன்படுத்துன பல்லாயிரக்கணக்கான கோரல்ஸ்ல ஒண்ணு பத்தியும் பேசவே இல்லை,
அதாவது அலெக்ஸ் காதில விழல – இல்லன்னா விழுந்தும் சாமர்த்தியமா சொல்லல …
இத கண்டிப்பா பாராட்டித்தானே ஆகணும்!!!
ஏன்னா – டார்கெட்டட் ஆடியன்ஸ்
வெல்டன் அலெக்ஸ் 👏 👏
தனக்கு முன்னால இருக்கும் ஆடியன்ஸோட வேலையும் வாழ்க்கையுமே எதுனா டார்கெட் ஓரியண்ட்டடா இருக்கும்ங்கறது அவர் அனுபவத்தில் தெரிஞ்சதால ஒவ்வொரு செக்மெண்ட் முடிவுலயும் அந்த டாபிக் நாயகர வெச்சு ஒரு கூஸ்பம்ஸ் மோடிவேஷனல் ஸ்பீச் குடுக்குறாப்ல பாருங்க …
க்ளாப்ஸ் அள்ளுது …
அதிலும் கர்ணன் கேரக்டர் சிவாஜிய வெச்சு லிங்க் பண்ணி ஒண்ணு சொன்னாப்ல ஜி …
சான்ஸே இல்ல …. அரங்கமே கத்திக்குமிக்குது….
இது என்னன்னு கொஞ்சம் கூட யோசிக்க விடாம என்கேஜ் பண்றது ,
அப்டி யோசிச்சாலும் போற போக்குல லேசா யாராவது இடிச்சா திரும்பி பாத்து சிரிச்சுட்டு போற அளவுக்கு மட்டும் மினிமம் காண்டு கிளப்பறது,
இந்த டெக்னிக்க சும்மா அல்டிமேட்டா பண்ணிருக்காப்ல ..
இத டைப் பண்ணும்போது
நடிகர் சோ ஒரு மேடைல பேசினது நினைவுக்கு வருது, (பாலச்சந்தர் விழான்னு நினைக்கிறேன்)
“” ஒருத்தன் செய்றது நமக்கு வரலன்னா , அத கிண்டல் பண்ணி விட்டுடணும் . அவன் லபோதிபோனு அடிச்சுப்பான். அந்த சத்தத்தில நமக்கு பேர் வரும். அப்படித்தான் நான் தனியா நாடக க்ரூப் ஆரம்பிச்சு பெயரெடுத்தேன் ” ….
நாலைஞ்சு வருஷம் கழிச்சி எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட மாதிரி யாருனா இந்த வீடியோல இருந்து செம ரகள மேட்டர எடுத்து அலெக்ஸ அட்டாக் பண்ண வாய்ப்பிருக்கு
(சட்டரீதியா அதுக்கும் பதில் சொல்ல அவர் பாடின சர்வமத கூட்டுப் ப்ராத்தனைப்பாடல் துணை இருக்கு)
ஆனா டூ லேட் ப்ரோ…
அதுக்குள்ள நம்மாளு பல வேர்ல்டு டூர்கள முடிச்சு சில கோடிகள சேர்த்து வேற லெவல்ல செட்டிலாகிருப்பார் …
அலெக்ஸ் நிஜமாவே ஜெயிச்சுட்டாப்ல ..