Author Archives: arrawinthyuwaraj

About arrawinthyuwaraj

be happy and make others happy

கிருஷ்ணனின் “சாக்‌ஷ்”

முகநூல் பதிவு :- ஆகஸ்ட் 1 / 2016 டி எம் கிருஷ்ணாவுக்கு விருதா?!! இது விருதான்னு தரலோக்கலா எறங்கி (இதுல சஞ்சய் சுப்ரமண்யம் மென்னியவேற நெரிச்சு) ஜெயமோகன் அண்ணாச்சி கம்பு சுத்தினது ஒரு பக்கம்.. ஆமா – இல்லன்னு போட்டி போட்டு ரெண்டு குருப்பா பிரிஞ்சு இங்கன ஒரே ராவடி… எனக்கென்னபோச்சு… நான் எம்பாட்ல … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எங்கூரு மொறம ….

படத்த நல்லா பாத்துக்குங்க …….. சாங்கியத்த சொல்றேன்….. மண்டகப்படி மொறம மீறாம செய்யணும்… அப்பத்தான் சரியா வரும்… ரைட்டா ?! 1. நொட்டாங்கைப் பக்க மேம்மூலையில ஒரு தாம்பாளத்துல அடுக்கிவச்சிருக்கு பாருங்க, அதான் பால்பன்னு… பொஃப்புன்னு பொங்கியிருக்கும், சீனிப்பாகுல முக்கி ஊறவச்சு அடுக்கிருவாக.. “அதுல ஒண்ணு குடுங்ண்ணே” ன்னு கேக்கணும். வாழெலைல வச்சு இன்னுங்கொஞ்சம் சீனிப்பாகு … Continue reading

Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்

ஆரம்பிச்சாச்சு …

ஆண்டு சரியாக நினைவில் இல்லை , ஆனால் பதிமூன்று வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் என்பது என் அனுமானம். மவுண்ட் ரோடு கூவக் கரையோரம் ஸ்பென்சர்க்குப் பக்கத்தில் இருக்கும் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் புத்தககக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகளிலும், சில குறிப்பிட்ட புத்தகக் கடைகளிலும் புத்தகம் வாங்கிப் பழகிய என் போன்றோருக்கு அது புது … Continue reading

Posted in Uncategorized | 4 பின்னூட்டங்கள்

நன்றி துரோகமே …!

சிறுவயதில் மாமன்காரன் நம்மைத் தூக்கி, கைகளை இறுகப் பிடித்தபடி கரகரவென சுற்றுவான். சுற்றச் சுற்ற கொஞ்சம் கொஞ்சமாகக் கண் கிறங்க ஆரம்பித்து சகலமும் மறைய ஆரம்பிக்கும் … நன்றாகக் கரக்கி சடாரென இறக்கி நிற்க வைத்த உடனே ஒரு தள்ளாட்டம் வருமே.. சில நொடிகள் எந்தப் பிரக்ஞையும் இராது…. கால்கள் உழன்று, பார்வை சுழன்று, நிதானத்திற்குள் … Continue reading

Posted in Uncategorized | 13 பின்னூட்டங்கள்

சக்கரக்கட்டி ராஜாத்தி ……

  ஒரு வாரநாளுக்கு உண்டான பரபரப்பு அவ்வளவாக அந்தத் தெருவில் இல்லை. இத்தனைக்கும் மதுரையின் முக்கிய சாலை ஒன்றின் கிளைத்தெரு அது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி. எல்லோரும் நேற்று செய்ததைத்தான் இன்றும் செய்துகொண்டிருந்தார்கள். மத்திம நாளொன்றின் சுடுவெயில் எந்தக் குறையுமின்றி தகித்தவண்ணம் இருந்தது.  வேலையொன்றை முடித்துவிட்டு அந்தத் தெருவழியாக வந்துகொண்டிருந்தேன். பழமையான தெருவாதலால் நெருக்கமான தொடர் … Continue reading

Posted in Uncategorized | 14 பின்னூட்டங்கள்

போலி இல்லாத வாலி…

  இந்த வருடம் தொடங்கியது முதல் என் ஆத்மப் ப்ரியங்கள் ஒவ்வொருவராக விடைபெறுவது இடி மேல் இடி …  நீ யாராக இருக்க விரும்புகிறாய் என்று யார் கேட்டாலும் சிறு வயதிலிருந்து ஒவ்வொருவரை சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் சமீப வருடங்களாக “வாலி ஐயா போல் வாழவேண்டும்” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இது சத்தியமான சத்தியம். … Continue reading

Posted in Uncategorized | 6 பின்னூட்டங்கள்

தனித்துவம் இல்லாத தனித்துவம் ….

    “மணிவண்ணன் சாரைப் பற்றி ஒரு பதிவு போடு” என்று ஜெர்மனியில் இருந்து நிம்மி சிவா அண்ணியின் குறுஞ்செய்தி என்னிடம் வந்தபோது நான் அவர் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தேன். அவரைப்பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் மனோபாலா சார் உள்ளே கண்ணீரோடு தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். “அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று வெளிப்படையாகவே சொல்லும் சத்யராஜ்சார் தலையில் கைவைத்தபடி நிலைகுலைந்துபோய் … Continue reading

Posted in Uncategorized | 8 பின்னூட்டங்கள்