முதல் பதிவு…

 

“நீ என்னென்னமோ பேசுற … இதையெல்லாம் ஏன் நீ எழுதக்கூடாது” என்று என்னிடம் கேட்ட பலரிடமும்  ” இல்லீங்க , நான் அங்க இங்க பிராய்ஞ்சு கொஞ்சம் தெரிஞ்சு வெச்சிருக்கேன். என்னைவிட சிறப்பா சொல்றவங்க நெறைய பேர் இருக்காங்க” என்று சொல்லி சமாளித்துவிடுவேன்.

சுவாரஸ்யமாக பேசுவது என்பது ஒரு வகை.  எதிரிலிருப்பவரின்  முகபாவங்களிலிருந்தே நம்முடைய சுவாரஸ்யத்தின் அளவு என்ன என்று  கணித்து  அதற்கு தகுந்தாற்போல நாம் பேசும் தலைப்புகளை மாற்றி சூழலுக்கேற்ப ஏதோ ஒன்றைப் பேசி  சமாளித்துவிடலாம். ஆனால்  எழுதுவது என்பது அப்படியல்ல. அது ஒரு பரீட்சையைப்போல எப்போதும் எனக்குத் தோன்றும்  .

படிப்பதில் காட்டும் ஆர்வமும் அக்கறையும் , ஏதோ ஒன்றை எழுதவேண்டும் என்று  ஆரம்பிக்கும்போது  எனக்கு வருவதே இல்லை. காரணம் அதன்மேல் உள்ள பயமும், நான் பிறரின் எழுத்துக்களை படித்துவிட்டு செய்த விமர்சனமும்தான். இது அனாவசியமானது என்று  தெரிந்திருந்தும்  என்னால் அந்த மனப்பிறழ்விலிருந்து வெளிவர இயலவில்லை.

இதாவது பரவாயில்லை. முகப்புத்தகத்தில் (facebook) சிறு துணுக்குகளாக நான் எழுதியதை நண்பர்கள் பலர் ஊக்குவிக்க, அதை ஒரு சொற்கட்டு வடிவமாக மாற்றி ‘நோட்ஸ்’ களாக போட ஆரம்பித்தேன். பல நண்பர்கள் “இதை ஏன் நீ ஒரு தொகுப்பாக வெளியிடக்கூடாது” என்று கேட்க ஆரம்பிக்க, “நிச்சயமா செய்யிறேன்” என்ற உறுதியும் கொடுத்து, தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு கவிதைத் தொகுப்பை முன்பதிவு செய்திருக்கிறேன். அந்த சுனாமி வரும் நாள் எதுவோ , எனக்கே தெரியவில்லை…..

இது நடந்து கொண்டிருக்கும்  காலங்களில் ,  தொடர்ந்து  சமூக வலைத் தளங்களில் சில காலம் சுற்றியலைந்தபோது பலரின் “ப்ளாக்” குகளை படிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது.  அது பலரின் அகராதியாகவும் , சிலரின் அங்காடியாகவும், அந்தந்த நபர்களின் கண்ணாடியாகவும் பெரும்பாலோரின் முகமூடியாகவும் செயல்பட்டு வருவதை என்னால் நன்றாக உணரமுடிந்தது.

மன்னிக்கவும், ஒரு இடைச்செருகல் … “ப்ளாக் ” என்பதன் தமிழாக்கம் என்ன என்று தெரியாததால் “ப்ளாக்” என்றே சொல்வதை குற்றமெனக் கொள்ளாதிருக்க வேண்டுகிறேன்.

நானும் ப்ளாக் எழுதலாம் என்று முடிவெடுத்து “பாய்மரம்” என்கிற பெயரில்  ப்ளாக் ஒன்றை ஆரம்பித்து , அதில் என் முகப்புத்தக வரிகளை காப்பி பேஸ்ட் செய்து, சிறிதுகாலம் அதை பலரிடம் சொல்லிவந்தேன். எல்லோரும் என் முகப்புத்தக நண்பர்களான காரணத்தினால் “ப்ளாக்க நல்ல டெவலப் பண்ணுங்க்க பாஸ். இதையே அங்க ரிபிட் பண்ணினா எப்படி” என்று கேட்க ஆரம்பித்தவுடன் அதை அப்படியே நிறுத்திவிட்டேன்.

சோம்பலும் அலட்சியமும்தான்  இவ்வாறு  நான் நடந்துகொள்வதற்கான காரணங்களே தவிர வேறொன்றுமில்லை.

ஆனால் இன்று (03-06-2012)  காலை முதல் என்னுளே  ஒரு குரல், “எதாவது எழுது” என்று. இது வழக்கம்போல வருவதுதான்.  ஆனால்  அதை இன்று என்  மனது கேட்டிருக்கும் போல.. ஏதோ ஒரு உந்துதல்… இதோ ஒரு ப்ளாக்கை உடனடியாக ஆரம்பித்து என் முதல் பதிவினை எழுதி முடிக்கப்போகிறேன்.

இது எதுவரை போகுமோ என்று எனக்குத் தெரியாது.

நான் எதைப் பற்றியெல்லாம் எழுதப்போகிறேன் …. தெரியாது…

தினமும் இதில் பதிவிடுவேனா … அதுவும் தெரியவில்லை.

ஆனால் ஆரம்பித்துவிட்டேன்….

இதை சரியாக செய்வேன் என்று என் மனம் சொல்கிறது…

உங்களின் அன்பும், வழிகாட்டுதலும் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்….. இதோ புறப்பட்டுவிட்டேன்…..

About arrawinthyuwaraj

be happy and make others happy
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

10 Responses to முதல் பதிவு…

 1. இதற்கு மேல் எழுத ஓடவில்லை இன்றைக்கு. பேசும் போது இருக்கிற சுதந்திரம் எழுதுவதில் இல்லை. பள்ளிக்கூடத்தில் பல பக்கங்கள் சரளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் மனப்பாடம் செய்து எழுதியது. சுயமாக எழுதுவது பெரும் சிரமமாக இருக்கிறது – யுவன் சந்திரசேகர் (கானல்நதி)
  முதலில் கொஞ்சம் சிரமமாக தோன்றும் பிறகு நாம் எழுதாமல் விட்டாலும் மனது சும்மா இருக்க விடாது.
  இன்று வரை நான் எல்லாப் பதிவுகளையும் பேசுவதைப்போலத்தான் எழுதி வருகிறேன். உங்கள் முதல் பதிவே சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
  – மதுரையிலிருந்து சித்திரவீதிக்காரன்.

  • arrawinthyuwaraj சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே….
   மதுரைக்காரனான எனக்கு சித்திரை வீதிக்காரரிடமிருந்து வந்த முதல் வாழ்த்து ….. உள்ளபடியே மெய்சிலிர்க்கும் அனுபவம்…
   உங்களின் அன்பும் ஆதரவும் கண்டிப்பும் என்றும் தொடரட்டும்…
   நன்றி…

 2. Nanthini Kumar சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் நண்பரே!

  • arrawinthyuwaraj சொல்கிறார்:

   நன்றி நந்தினி குமார் அவர்களே…
   என்றும் உங்களைப் போன்ற அன்பர்களின் அன்பும் ஆசீர்வாதமும்தான் என்னை இன்னும் இன்னும் எழுதத் தூண்டுகிறது…
   வாழ்த்திய உங்களுக்கு என் அன்பும் நன்றிகளும்…

 3. Oswin சொல்கிறார்:

  வாழ்த்துகள்

  • arrawinthyuwaraj சொல்கிறார்:

   மிக்க நன்றி ஆஸ்வின் அவர்களே…
   உங்களைப் போன்ற அறிஞர்களின் ஆசிகளும் அன்பும் என்னை இன்னமும் எழுத தூண்டுகிறது..
   உங்களுக்கு என் அன்பும் நன்றிகளும்

 4. ramdaus சொல்கிறார்:

  ப்ளாக்கிற்கு வலைப் பூ என்று பெயர் நண்பா. ஆனால் என்னைக் கேட்டால் சித்திரைவீதிக் காரர் சொல்வது போல பேசுவதை அப்படியே எழுதுவது தான் சிறப்பு. தமிழ் படுத்துகிறேன் என்று தமிழைப் படுத்திக் கொண்டிருக்கும் பல ப்ளாக்குகளை நானறிவேன். சொல்ல வருவது தான் முக்கியம். கொட்டை வடி நீர், குழம்பி என்றெல்லாம் குழப்பாமல் சொல்ல வர்றதை காப்பின்னு ஸ்ட்ரெயிட்டா சொல்லிடணும். இதனாலெல்லாம் தமிழ் மொழி ஒன்றும் ஆகி விடாது. எனவே ரொம்ப கவலை வேண்டா.

  வெப் லாக் என்பதே We(b Log) ப்ளாக் ஆகி விட்டது.

  • arrawinthyuwaraj சொல்கிறார்:

   மிக அருமையாக “ப்ளாக்” கிற்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நண்பா..
   உன் பாராட்டும் ஊக்குவிப்பும் என்றுமே என்னோடு இருக்கும்போது இன்னும் உற்சாகமாய் தொடருவேன்…

 5. ranjani135 சொல்கிறார்:

  உங்கள் முதல் பதிவிற்கு தாமதமாக வந்து வாழ்த்துச் சொல்லுகிறேன். வந்ததும் நல்லதாயிற்று. ‘ப்ளாக்’ என்பதற்கு அருமையான விளக்கம் நானும் தெரிந்து கொண்டேன். படிக்கிறவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் இயல்பான நடையே பாலமாக இருக்கும்.
  வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!

  • arrawinthyuwaraj சொல்கிறார்:

   திருமதி ரஞ்சனி அவர்களுக்கு,
   தங்கள் நேரத்தை ஒதுக்கி பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி..
   இந்தப் பரந்த மனப்பான்மைக்கு முன் தாமதம் ஒரு பொருட்டே அல்ல..
   தங்களின் அன்பும் ஆசியும் விமர்சனமும் எப்போதும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்
   நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s